இந்தியா

டெல்லி மாணவி வழக்கு: குற்றவாளிகள் வழக்கறிஞர்கள் விலகல்

செய்திப்பிரிவு

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 2 பேர் விலகினர். தங்கள் பணியில் குறுக்கீடு இருப்பதாக தெரிவித்து வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விலகியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மாண தண்டனை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்யவுள்ளது.

வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மற்ற 4 குற்றவாளிகளுக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT