இந்தியா

6 நிமிடம் பேசுவதற்குள் 60 முறை மீரா குமார் குறுக்கிட்டார்: சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வீடியோ

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும் குடியரசுத் தலைவருக்கான போட்டியில் எதிர்க்கட்சியின் வேட்பாளருமான மீரா குமார் 60 முறை குறுக்கிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்வீட்டில் லோக்சபா வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

“இப்படித்தான் மீரா குமார் என்னை நடத்தினார்” என்று சுஷ்மா தலைப்பிட்டு வீடியோ வெளியிட்டார் தன் ட்விட்டர் பக்கத்தில்.

அந்த வீடியோவில் சுஷ்மா அன்று லோக்சபாவில் பேசிய, ‘சுதந்திரத்துக்குப் பிறகு மிகவும் ஊழல் நிரம்பிய அரசு’ என்று ஐமுகூ ஆட்சியை விமர்சனம் செய்தது உள்ளது. அப்போது இது சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸாரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது, பாஜக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி சுஷ்மா கருத்துக்கு வரவேற்பு தெரிவித்ததும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அப்போது 6 நிமிடங்கள் தான் பேசி முடிப்பதற்குள் சபாநாயகர் மீரா குமார் 60 முறை குறுக்கிட்டதாக சுஷ்மா குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது ராம்நாத் கோவிந்துக்கு எதிராக மீரா குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதையடுத்து மீரா குமாரை விமர்சிக்கும் விதமாக இந்த வீடியோவை சுஷ்மா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT