இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

செய்திப்பிரிவு

மத்தியபிரதேச மாநிலம், செகோர் மாவட்டம், ராம்நகர் என்ற கிராமத் தில் ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்து. இதில் சத்யா என்ற சிறுவன் நேற்று முன்தினம் விழுந்தான்.

இத்தகவல் மாவட்ட நிர்வாகத் துக்கு தெரிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங் கின. சிறுவன் 25 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டு, ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் ஆழமான மற்றொரு குழி தோண்டப்பட்டது. இதற் கிடையில் சிறுவன் சுவாசிப்பதற்கு மருத்துவக் குழுவினர் ஆக்ஸிஜன் செலுத்தி வந்தனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். 13 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டான்.

உடனடியாக அச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT