இந்தியா

மதுவிலக்கு சட்டத்தை மீறியதால் ஒட்டுமொத்த கிராமத்துக்கும் அபராதம்: பிஹார் அரசு அதிரடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பிஹாரில் பூரண மதுவிலக்கு சட்டம் அண்மையில் அமல்படுத் தப்பட்டது. இதனால் கள்ளச் சாராயம் மற்றும் கள்ளச்சந்தை யில் மது புழங்குவதை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நட வடிக்கையை எடுத்து வருகிறது. ஒரு குடும்பத்தில் கணவன் மது அருந்தினால், மனைவி தண்டிக் கப்படலாம் என்றும், ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

எனினும் முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் கைலாஷ்புரி கிராமத்தில் தொடர்ந்து கள்ளச் சந்தையில் மது விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து மது விற் பனையை நிறுத்திக்கொள்ளும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுக் கப்பட்டது. ஆனால் கிராம மக்கள் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.எம்.தியாகராஜன் நேற்று திடீரென கைலாஷ்பூரி கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 50 வீடுகளில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சி யர், ஒட்டுமொத்த கிராமத்துக் கும் ரூ.5,000 அபராதம் விதித்தார்.

பிஹாரில் பூரண மதுவிலக்கு சட்டம் அமலான பின், முதல் முறையாக அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நாலந்தா மாவட்டத்தில் மது விற்பனை செய்ததாக 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,083 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT