இந்தியா

அயோத்தி பிரச்சினை உணர்வுபூர்வமானது; இணக்கமாகத் தீர்வு காணப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினை உணர்வுபூர்வமானது. இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் இணக்கமாக கையாள வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

அயோத்தி பிரச்சினை தொடர்பாக பாஜக எம்.பி. சுப்பிரமனியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினை உணர்வுபூர்வமானது. இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் இணக்கமாக கையாள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள வசதியாக ஒரு முதன்மை மத்தியஸ்தரை தேர்வு செய்துதரவும் தயாராக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து அனைத்து தரப்பினரும் ஆலோசித்து தங்களை முடிவை மார்ச் 31-ம் தேதியன்று தெரிவிக்குமாறு தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹார் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT