இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு, கோவாவில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இக்கட்சியின் தலைவரும் மாநில வேளாண் அமைச்சருமான விஜய் சர்தேசாய் இது தொடர்பாக நேற்று கூறும்போது, “மத்திய அரசின் புதிய உத்தரவில் எனக்கு உடன்பாடில்லை. இதனால் விவசாயிகள், இறைச்சி விற்பனையாளர்கள் வறுமையில் சிக்குவார்கள். ஓட்டல்கள், தோல் தொழில் களும் பாதிக்கப்படும். அவசர கதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “இது எங்கள் கட்சியின் கருத்து. அரசின் கருத்தாக கருதக்கூடாது” என்றார்.
மத்திய அரசின் உத்தரவால் கோவாவில் இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்த அவர், அதிக லாபம் சம்பாதிப்பதற்காக தற்போதுள்ள சூழலைச் சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்” என்றார்.