அதிக மோப்ப சக்தி கொண்ட பெல்ஜியம் ஷெப்பர்ட் நாய்கள் தேசிய பாதுகாப்புப் படையில் (என்.எஸ்.ஜி.) சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவில் பெல்ஜியம் மாலி னோய்ஸ் என்றழைக்கப்படும் பெல்ஜியம் ஷெப்பர்ட் நாய்கள் பயன்படுத்தப் படுகின்றன. பாகிஸ்தானின் அபோதா பாதில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்கச் சென்றபோது பெல்ஜியம் ஷெப் பர்ட் நாயும் அழைத்துச் செல்லப் பட்டது.
பின்லேடன் தங்கியிருந்த மாளிகையில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் வீரர்கள் இறங்கியபோது நாயும் இறக்கப்பட்டது. பின்லேடன் மறைவிடத்தைக் கண்டுபிடித்து கொடுத்தது அந்த நாய்தான். இப்போது இந்தியாவின் என்.எஸ்.ஜி. கமாண்டோ படையில் முதல்முறையாக 12-க்கும் மேற்பட்ட பெல்ஜியம் ஷெப்பர்ட் நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நான்கு கால் வீரர்களான அந்த நாய்கள் வெடிகுண்டுகள், மனித நடமாட்டத்தை அறிய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று என்.எஸ்.ஜி. மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.-பிடிஐ