இந்தியா

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு: வங்கி அதிகாரிகள் 156 பேர் இடை நீக்கம் - மக்களவையில் அருண் ஜேட்லி தகவல்

செய்திப்பிரிவு

மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து ஜேட்லி கூறியதாவது:

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய நோட்டுகளை மாற்றிக் கொடுக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்து வங்கி ஊழியர்கள் ஆங்காங்கே முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 156 மூத்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 41 பேர் வேறு வங்கிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், போலீஸ் மற்றும் சிபிஐ-யிடம் 26 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளன. தனியார் வங்கிகளைப் பொறுத்த வரையில் 11 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை, போலீஸ், சிபிஐ விசாரணையும் நடைபெற வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT