இந்தியா

அமர்நாத் யாத்திரை அமைதியாக நடக்க பலத்த பாதுகாப்பு

பிடிஐ

தெற்கு காஷ்மீரில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள் கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனிதயாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி யாத்திரைக்கான முதல் குழு ஜம்முவின் அடிவார முகாமில் இருந்து அமர்நாத்துக்கு புறப்பட்டுச் செல்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீஅமர்நாத்ஜி கோயில் வாரியமும், மாநில அரசும் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப் படுத்துவது குறித்து நக்ரோடாவில் முக்கிய அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அப்போது அசம்பாவிதங் கள் நிகழாமல், அமைதியான முறையில் அமர்நாத் யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. யாத் திரைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், உளவுத் துறையின் தகவல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் எந்தவொரு நிலைமையையும் சமாளிக்கும் வகையில் விழிப்புடன் இருக்க அறி வுறுத்தப்பட்டனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT