திருமலையில் இன்று ரதசப்தமி விழா வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் ரதசப்தமி விழா நடக்கும் நாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மலையப்பர் திருவீதி உலா நடக்கும். இதனால் ரதசப்தமி விழாவை சிறிய பிரம்மோற்சவம் என பக்தர்கள் அழைக்கின்றனர். இவ்விழா இன்று காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதைக் காண நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வசதிக்காக திருமலையில் இன்று நடைபெறவிருந்த அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள் ளது.