இந்தியா

மாயாவதியை தரக்குறைவாக பேசிய தயா சங்கர் ஜாமீனில் விடுவிப்பு

பிடிஐ

மாயாவதியை தரக்குறைவாக பேசியதான புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பாஜக-வின் தயா சங்கர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மாயாவதியை அவதூறாக பேசிய பிறகு 9 நாட்கள் தலைமறைவாக இருந்த தயாசங்கர் கடந்த ஜூலை 29-ம் தேதி உ.பி. சிறப்பு காவல்படை, பிஹார் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு மாவ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று ஜாமீனில் வெளிவந்த தயாசங்கர் கோயிலில் வழிபாடு செய்து விட்டு லக்னோ சென்றார்.

ஜாமீனை பகுஜன் சமாஜ் எதிர்த்து முறையீடு செய்வது பற்றி தயாசங்கர் கூறும்போது, “பகுஜன் அளிக்கும் அனைத்து சவால்களையும் சந்திக்கத் தயாராகவே உள்ளேன். நான் அதிகம் பேச மாட்டேன். லக்னோ சென்று எனது குடும்பத்தினரை பார்க்கப்போகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT