இந்தியா

கெரானில் ஓய்ந்தது சண்டை: தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் கெரான் பகுதியில் 15 நாட்களாக நீடித்து வந்த சண்டை இன்று முடிவுக்கு வந்தது. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முழுமையாக முறியடிக்கப்பட்டது.

இந்தத் தகவலை ராணுவத் தளபதி விக்ரம் சிங் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை திரும்பப் பெறுவதாகவும் அவர் அறிவித்தார்.

காஷ்மீரில் கெரான் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத் தாக்குதல் இன்று காலை இறுதிக் கட்டத்தை எட்டியது. அதன்

கடந்த 24 ஆம் தேதியன்று காஷ்மீரில் கெரான் பகுதி வழியாக இந்தியாவுக்குள் 30 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களது முயற்சியை ராணுவம் முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

தீவிரவாதிகள் 15 நாட்களாக கெரான் பகுதியில் முகாமிட்டிருந்தனர். அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, அவர்களது ஊடுருவல் முயற்சியை முழுமையாக ராணுவம் முறிடித்தது.

இந்தத் தாக்குதில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

எல்லையில் இந்தத் தீவிரவாத ஊடுருவல் முயற்சிக்கு, பாகிஸ்தான் உறுதுணையாக இருந்ததற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக இந்திய ராணுவம் தரப்பு தெரிவித்துள்ளது கவனத்துக்குரியது.

SCROLL FOR NEXT