இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: காற்று மாசு தடுக்கப்படும்

செய்திப்பிரிவு

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று மத்திய அமைச்சர்கள் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

காலாவதி சட்டங்கள் நீக்கம்

மக்களவையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பேசியதாவது:

நாட்டில் வழக்கற்றுப்போன சுமார் 1,159 சட்டங்களை அரசு நீக்கியுள்ளது. மேலும் 400 சட்டங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை குறித்து மக்கள் அறிய விரும்பினர். இதனால் கடந்த சில மாதங்களாக அது தொடர்பான ஆவணங்களையும் அரசு வெளியிட்டு வருகிறது. மேலும் பல ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும்.

காற்று மாசு தடுக்கப்படும்

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

காற்று மாசுபாடு காரணமாக 12 லட்சம் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக பசுமை அமைதி இந்தியா தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வெளியிட்ட ஆண்டு அறிக்கை மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றதாக தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டால் நிகழும் மரணம் தொடர்பான தீர்க்கமான தகவல்களைப் பெறுவதற்கு நாட்டில் நேரடியான அமைப்புகள் ஏதும் இல்லை. அதே சமயம் காற்று மாசுபாட்டை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து முடுக்கிவிட்டு வருகிறது.

சூரிய சக்தி: தமிழகம் முதலிடம்

மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் சூரிய சக்தி திறன் 4 மடங்காக அதிகரித்து வருகிறது. ஒரு ஜிகா வாட் சூரிய மின்சார உற்பத்தி என்ற இலக்கை தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்து விட்டன. ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் அந்த இலக்கை நெருங்கி வருகின்றன. கடந்த டிசம்பர் 31 வரை மொத்தமாக 9,012 மெகா வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வரும் 2022-க்குள் 20 ஆயிரம் மெகா வாட்டில் இருந்து ஒரு லட்சம் மெகா வாட்டா இலக்கை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்த வரி 31 ஆயிரம் கோடி

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:

கட்டு மான வரியாக கடந்த டிசம்பர் 20 வரை மாநில அரசுகள் மொத்தமாக ரூ.31,694 கோடி வசூலித்துள்ளன. அதில் ரூ.6,866 கோடியை பல்வேறு திட்டங்களுக்காக செலவிட்டுள்ளன. கட்டுமான தொழி லாளர்கள் வரி சட்டம் 1996-ன்படி, கட்டுமானத்துக்கான செலவில் இருந்து 2 சதவீதத்துக்கு மேல் வரியாக வசூலிக்கக் கூடாது. அதன்படி மாநில அரசுகள் 1 சதவீத வரியை வசூலித்து வருகின்றன.

SCROLL FOR NEXT