இந்தியா

மொகாலியில் ஏகே 47 துப்பாக்கி, பாகிஸ்தான் சிம், மொபைலுடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது

பிடிஐ

பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஏகே 47 துப் பாக்கி, வெடிமருந்துகள், பாகிஸ் தான் சிம் கார்டுகள், மொபைல் போன்களுடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்தப் பகுதி யில் நேற்றும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. மேலும், பஞ்சாப் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏகே 47 ரக துப்பாக்கி, பாகிஸ்தான் சிம் கார்டு கள், மொபைல் போன்கள், வெடி மருந்துகள் வைத்திருந்த 3 பேரை பஞ்சாப் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து மொகாலி போலீஸ் சிறப்பு கண்காணிப்பாளர் புல்லார் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பல்வேறு மாநிலங் களுக்கு போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 3 குற்ற வாளிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் சண்டிகர் அருகில் உள்ள ஹவெலியன் கிராமத்தில் வசிக் கும் குர்ஜாந்த் சிங் (எ) போலு (26), சந்தீப் சிங் (25) மற்றும் ஜதீந்தர் சிங் (எ) ஜிண்டி (34) என்று தெரிய வந்துள்ளது’’ என்றார்.

புல்லார் மேலும் கூறுகையில், ‘‘வழிப்பறி, கொள்ளை, கடத்தல் போன்ற வழக்குகளில் தேடப் படும் ஜெய்ப்பால் என்பவருடன் இந்த 3 பேருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்கள் போதைப் பொருள் கடத்தல் மட்டு மன்றி, பணக்கார வீட்டு குழந்தை களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT