இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக கடந்த 2007 ஏப்ரல் 1-ம் தேதி வங்கதேசத்தில் இருந்து 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மேற்குவங்கத்தில் ஊடுருவ முயன்றனர்.
அவர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களில் ஒரு தீவிரவாதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் சென்ற போது தப்பியோடிவிட்டார். இதர 3 பேர் மீதான வழக்கு வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பாங்கோன் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. முகமது யூனுஸ், அப்துல்லா கான், முஷாபர் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன் றம் தீர்ப்பளித்தது. இதில் முகமது யூனுஸ், அப்துல்லா கான் பாகிஸ் தானை சேர்ந்தவர்கள். முஷாபர் கான் காஷ்மீரைச் சேர்ந்தவர்.