இந்தியா

தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

பிடிஐ

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவ வீர்ர்கள் முறியடித்தனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் காய மடைந்தார்.

குப்வாரா மாவட்டத்தின் டாங்தார் செக்டாரில் நேற்று காலை தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றபோது, பாதுகாப்புப் படை யினர் அவர்களை நோக்கி துப் பாக்கியால் சுட்டனர். தீவிரவாதி களும் திருப்பிச் சுட்டனர்.

சிறிது நேரத்தில் ஊடுருவல்காரர் கள் அங்கிருந்து தப்பியோடினர். துப்பாக்கிச் சண்டையில் காய மடைந்த வீரர் ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT