கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமை யிலான அரசு ஆட்சி அமைத்த 2-வது நாளில் டிஜிபி பதவியில் இருந்து சென்குமார் நீக்கப்பட்டு பணி மாற்றம் செய்யப்பட்டார். சட்டக் கல்லூரி தலித் மாணவர் படுகொலை வழக்கு மற்றும் புட்டிங்கல் கோயில் தீ விபத்து விவகாரங்களைக் கையாள்வதில் தோல்வி அடைந்ததால், இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது.
மாநில அரசின் முடிவை எதிர்த்து சென்குமார் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் மற்றும் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித் தன. இதையடுத்து உச்ச நீதிமன் றத்தில் சென்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி மதன் பி.லோக்குர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. சென்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் ஆஜராகி வாதாடினர். அப்போது அரசியல் உள்நோக்கத்துக்காகவே தான் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாக சென்குமார் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து அவரது சார்பில் வழக்கறிஞர் தவே மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘போலீஸ் உயரதிகாரியாக புட்டிங்கல் தீ விபத்து மற்றும் சட்ட மாணவர் படுகொலை வழக்கு களில் நேரடியாக பொறுப்பு வகிக்கவில்லை. மாநிலத்தில் 9 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. அந்த படுகொலை களுக்கு முதல்வரும், உள்துறை அமைச்சருமான பினராயி பொறுப்பேற்பாரா? அவர் அதற்கு பொறுப்பேற்காத பட்சத் தில், தொடர்பே இல்லாத வழக் குகளுக்காக நான் ஏன் பொறுப் பேற்க வேண்டும்?’’ என கூறி யிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி லோக்குர் இது தொடர் பாக பதில் அளிக்கக் கேட்டு, மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் அடங்கிய உயர் நிலை பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். முன்னதாக மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், ‘‘பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்காக இவ்வழக்கு தொடுக்கப்படவில்லை. பணி மாற்றத்துக்காகவே தொடுக்கப் பட்டுள்ளது. எனவே அத்தகைய உயர்நிலை ஆணையத்தின் விசா ரணை தேவையற்றது’’ என வாதாடினார்.
முன்னாள் டிஜிபி சென்குமார்