இந்தியா

சிஸ் ராம் ஓலா மறைவுக்கு இரங்கல்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

மத்திய தொழிலாளர் அமைச்சர் சிஸ் ராம் ஓலாவின் மறைவுக்கு, நாடாளுமன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

சிஸ் ராம் ஓலா மறைவு:

மத்திய தொழிலாளர் மற்றும் பணி நியமனத்துறை அமைச்சர் சிஸ் ராம் ஓலா (86) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சிஸ் ராம் ஓலா இதயநோய் உள்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். அவர், குர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நவம்பர் முதல் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு சமீபத்தில் கண் மற்றும் குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சி

ஸ் ராம் ஓலாவின் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ரஜே சிந்தியா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வாழ்க்கை வரலாறு:

கடந்த 1952 ஆம் ஆண்டு, ராஜஸ்தானின் தொலைதூரக் கிராமத்தில் ஓலா பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். ஓலாவுக்கு கடந்த 1968 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கடந்த 1927 ஆம் ஆண்டு பிறந்த ஓலா, 1957 முதல் 90 வரை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இதில் 1980 முதல் 90 வரை மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர், 5 முறை எம்.பி.யாகவும், 8 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

இவர் பல்வேறு காலகட்டங்க ளில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), நீர்வளத்துறை இணை யமைச்சர் (தனிப்பொறுப்பு), தொழிலாளர் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர், கனிமவளத் துறை அமைச்சர் என மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிஸ் ராம் ஓலாவின் சொந்த ஊரான ஜுன்ஜுனு பகுதியில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. சிஸ்ராம் சிங் ஓலாவின் மகன் பிஜேந்தர் ஓலா, ஜுன்ஜுனு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

SCROLL FOR NEXT