ஆம்ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப் பட்ட யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண் இருவரும் புது கட்சி தொடங்க தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். வரும் 2017-ல் பஞ்சா பில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் புதிய கட்சி சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
‘ஸ்வராஜ் அபியான்’ என்ற அமைப்பை தன் ஆதரவாளர்களு டன் சேர்ந்து இருவரும் தொடங்கி யுள்ளனர். இதுதொடர்பாக ஸ்வராஜ் அபியான் அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “விரைவில் கட்சி தொடங்க திட்ட மிட்டுள்ளோம். இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. பஞ்சாப் தேர்த லில் வேட்பாளர்களை நிறுத்தவும் தீவிரமாக யோசித்து வருகிறோம். பஞ்சாபில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இசையமைப்பாளர் பாய் பல்தீப் சிங் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை நாங்கள் ஆதரிப்போம்” என்றார்.