ஜம்மு-காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் விரிவுரையாளர் ஒருவர் பலியானார். 18 பேர் காயமடைந்தனர்.
“காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் க்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர் களை பொதுமக்கள் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில், பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். இதில் விரிவுரையாளர் சபிர் அகமது மோங்கா (30) உயிரிழந்தார். 18 பேர் காயமடைந் தனர். அவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போராட்டத்தை முன்னின்று நடத்தும் இளைஞர்களைக் குறி வைத்து ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு வீடு வீடாக சோதனை நடத்தியதாகவும், அதனை மக்கள் தடுத்ததாலும் மோதல் ஏற்பட்டதாக உள்ளூர்வாசி கள் தெரிவித்துள்ளனர்.
“இச்சம்பவம் தொடர்பான விரிவான தகவல் திரட்டப்படு கின்றன. விரைவில் அறிக்கை வெளியிடப்படும்” என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நகர் மாவட்டம், அனந்த்நாக் நகரம், பாம்போர் காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இதர பகுதிகளில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சோனாவாரில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குச் செல்லும் பாதைகளை ராணுவம் மூடியுள் ளது. பிரிவினைவாதிகள் ஐ.நா. அலுவலகத்துக்கு பேரணியாக செல்வதற்கு அழைப்பு விடுத் துள்ளனர். இந்த 72 மணி நேர போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இரவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள் ளது. கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “தற்போதைய பாஜக- மக்கள் ஜனநாயக கட்சி அரசால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை இணைந்து தீர்வு காண முன்வர வேண்டும். இவற்றுடன் விருப்பமிருந்தால் மக்கள் ஜனநாயக கட்சி இணைந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “சிதம்பரத்தின் கருத்து அரசியல் சந்தர்ப்பவாதம். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இணைய வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. அந்த அரசு நிலைபெறுவதை அரசியல் ஆதாயம் கருதி காங்கிரஸ் விரும்பவில்லை. உத்திப்பூர்வ விஷயங்களில் காங்கிரஸ் இரட்டை நாக்குடன் பேசுகிறது. குறிப்பாக உணர்வுப்பூர்வமான விஷயங்களில் இரக்கமற்று உள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வெறுப்பில் என்ன செய்வது எனத் தெரியாமல் பேசி வருகிறார். தனது ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பதையும், நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதையும் அவர் மறந்து விட்டார்” என விமர்சித்துள்ளார்.