வெள்ளி நள்ளிரவு நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
அவர்கள் அனைவரையும் ஆலோசித்த பிறகே நாங்கள் இந்த மறைமுக வரிச் சீர்த்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம் எனவே அவர்கள் இதிலிருந்து ஓடி ஒளிய முடியாது என்றார்.
''கலந்து கொள்ள வேண்டாம் என்ற முடிவை ஓவ்வொரு கட்சியும் மறுபரிசீலனை செய்யும் என்றே நாங்கள் நம்புகிறோம். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் ஒரே வரிச்சீர்த்திருத்தம் இதுதான்.
ஜிஎஸ்டி குறித்த வரி விகிதம், விதிமுறைகள் உட்பட அனைத்துக் கட்சிகள், மாநில அரசுகள் ஆகியவற்றை கலந்தாலோசித்தே செய்துள்ளோம் எனவே அவர்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்'' என்றார்.
திரிணமூல், இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நள்ளிரவு நாடாளுமன்ற ஜிஎஸ்டி வரித் திட்ட அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததையடுத்து அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.