அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள் குறைந்து 62.91 என்ற நிலையில் இருந்தது.
இது குறித்து அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறுகையில் : எண்ணெய் இறக்குமதியார்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதும், சர்வேதச சந்தையில் யூரோவின் மதிப்பு குறைந்துள்ளதும் இந்திய ரூபாய் மதிப்பு குறைய காரணம் என்றனர்.
இதற்கிடையில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 142.04 புள்ளிகள் குறைந்து 19,585.23 புள்ளிகளில் வர்த்தகமாகியிருந்தது.