தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் வரும் 27-ம் தேதி வாரங்கலில் நடைபெறவுள்ளது. இந்த பொது கூட்டத்துக்காக அமைச்சர்கள் முதல் கட்சியின் கடைகோடி தொண்டர்கள் வரை கூலி வேலை செய்து சுயமாக நிதி திரட்ட வேண் டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அமைச்சர் கள் பலர் கூலி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ராமாராவ், ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று ஐஸ் கிரீம், ஐஸ் காபி, தேநீர் ஆகியவற்றை தயாரித்து விற்றார். அப்போது ஒரு ஐஸ் கிரீமை, மாநில எம்.பி. மல்லாரொட்டி ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கினார். மேலும் இவர் தயாரித்த தேநீரை அந்த ஓட்டலின் உரிமையாளர் ரூ.1.30 லட்சம் கொடுத்து வாங்கி ருசி பார்த்தார். இதே போல் வாடிக்கையாளர்கள் பலரும் தேநீர், காபி ஆகியவற்றை வாங்கி சுவைத்தனர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.7.30 லட்சம் வசூலானது. இதே போன்று நாராயணப்பேட்டையில் எம்எல்ஏ ராஜேந்தர் ரெட்டி மூட்டை சுமந்து ரூ.926 பணம் ஈட்டினார்.