ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் நேரடியாக மோதுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது, ஏராளமான பயணிகள் உயிர் தப்பினர்.
புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 11 மணியளவில் டெல்லி-கோவா ஏர் இந்தியா விமானம் 122 பயணிகளுடன் டேக் ஆஃப் செய்ய ஏர் டிராபிக் கண்ட்ரோல் 28/10 ஓடுபாதைக்கான அனுமதியை அளித்தது. அதே நேரத்தில் ராஞ்சியிலிருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கவும் அடுத்துள்ள 27-ம் எண் ஓடுபாதைக்கான அனுமதி கிடைத்தது.
இரு பாதைகளும் இணை பாதைகள் அல்ல இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேரும் பாதைகளாகும். இந்நிலையில் நேரடி மோதல் ஆபத்து ஏற்பட்டது.
ஆனால் தவறு உடனடியாக கவனிக்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் செய்ய வேண்டாம் என்றும் இண்டிகோ விமானம் தரையிறங்க வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரம் வானில் சுற்றட்டும் என்று தொடர்புறுத்தப்பட்டது.
இதனையடுத்து பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானம் 12.50 மணிக்கு கோவா புறப்பட்டுச் சென்றது.