பிஹார் சட்டப்பேரவையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) நேற்று நிறை வேற்றப்பட்டது.
ஜிஎஸ்டி மசோதா நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்டமாக்க குறைந்த பட்சம் 15 மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற வேண்டும்.
அதன்படி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் ஜிஎஸ்டி மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப் பட்டது. அதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பிஹார் மாநில சட்டப்பேரவையில் அந்த மசோதா நேற்று நிறை வேற்றப்பட்டது.