ஊழலுக்கு எதிரான அனைத்து ஆவணங்களை காங்கிரஸ் அரசு சிதைத்து விட்டது என பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றக் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடங்குவதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களே பெருமளவில் காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ்: "மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அமைப்புகள் ஜனநாயக அமைப்பின் முக்கிய அங்கங்களாகும்.
15-வது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குறைந்த அளவில் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றது வருத்தமளிக்கிறது. 16-வது நாடாளுமன்றத்தில் பாஜக என்ன மாதிரியான பங்காற்றும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்றார்.