இந்தியா

திபெத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மானசரோவர் நோக்கி சென்ற இந்திய குழுவுக்கு தடை: எல்லையில் தடுத்து நிறுத்தியது சீனா

பிடிஐ

திபெத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட தாகக் கூறி, சிக்கிம் மாநிலம் வழியாக மானசரோவருக்கு யாத்திரை மேற்கொள்ள முயன்ற இந்திய குழுவினரை எல்லையிலேயே சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்ல பல வழிகள் உள்ளன. இதில் சிக்கிம் மாநிலம் நாது லா வழியாக செல்வதற்காக 350 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழியாக யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யும் முகமை யாக சிக்கிம் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்படு கிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 47 பேர் அடங்கிய முதல் குழு கடந்த 15-ம் தேதி சிக்கிம் சென்றடைந்தது. இவர்கள் 19-ம் தேதி எல்லையைக் கடந்து சீனா பகுதிக்குள் செல்ல திட்டமிட்டி ருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை.

இதனால் அடிவார முகாமி லேயே காத்திருந்த அவர்கள், நேற்று முன்தினம் மீண்டும் எல்லையைக் கடக்க முற்பட்டனர். அப்போது, அவர்களை சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து யாத்ரீகர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதாக சிக்கிம் மாநில அதிகாரிகள் நேற்று தெரிவித் தனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறும்போது, “யாத்ரீகர்கள் நாது லா வழியாக மானசரோவருக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீன அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்” என்றார்.

சீனா உறுதி

இதுகுறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “திபெத் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட் டுள்ளது. இதனால் சாலைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி மானச ரோவர் செல்ல இந்திய யாத்ரீகர் களுக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. வானிலை சீரடைந்து, சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT