தொழிலாளர் ஓய்வுதியத் திட்டம் 1995-ன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக பலனடைவார்கள். மத்திய தொழி லாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் மாநிலங்க ளவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச ஓய்வூதியப் பரிந்துரை நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது.
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 என்பது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 8.33 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதியாக அவர்களை பணியில் வைத்துள்ள நிறுவனங்கள் அளித்து வருகின்றன. மத்திய அரசு 1.16 சதவீதப் பங்களிப்பை அளிக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணை யத்தின் மதிப்பீட்டின்படி அடிப்படை சம்ப ளத்தில் கூடுதலாக 0.63 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்போது குறைந்தபட்சம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் இப்போது சுமார் 14 லட்சம் தொழிலாளர்கள் ரூ.500-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.