இந்தியா

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: 5 பேர் பலி

செய்திப்பிரிவு

மகாராஷ்டிரம் மாநிலத்தில், 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அகமதுநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து டோகாவடே பகுதியை கடந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.

சம்பவம் குறித்து மீட்புப் பணி அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்து அதிக உயரத்தில் இருந்து கவிழ்ந்துள்ளது. இதனால் பயணிகள் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதுவரை 5 சடலங்களை மீட்டுள்ளோம். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது, என்றார்.

காயமடைந்தவர்களுக்கு முர்பாத், டோகாவடே பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT