மத்தியபிரதேசத்தின் மாண்டசார் மாவட்டம், பிப்லியா மண்டி பகுதியில் ஹிந்தி நாளேடு ஒன்றின் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கமலேஷ் ஜெயின் என்ற இந்த செய்தியாளர் புதன் இரவு தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த இருவர் அவரது மார்பில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்று கமலேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக பிப்லியா மண்டி காவல் ஆய்வாளர் அனில் சிங் தாக்கூர் கூறும்போது, “சமீபத்தில் சிலருடன் கமலேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.