இந்தியா

மாணவிக்கு பாலியல் மிரட்டல்: டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

டெல்லி பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யூ) உட்பட்ட ராம்ஜாஸ் கல்லூரி கருத்தரங்கில் பேசு வதற்கு ஜேஎன்யூ மாணவர் உமர் காலித் கடந்த வாரம் அழைக்கப் பட்டிருந்தார். அவர் தேசத் துரோக வழக்கில் சிறை சென்றவர் என்ப தால் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன்காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ராம்ஜாஸ் கல்லூரி ஏபிவிபி அமைப்பினரும் அகில இந்திய மாணவர் சங்கத்தினரும் மோத லில் ஈடுபட்டனர். இதில் ஏபிவிபி-க்கு எதிராக சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்த டெல்லி லேடி ராம் கல்லூரி மாணவி குர்மேகர் கவுருக்கு பாலியல் மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.

கார்கில் போரில் உயிரிழந்த கேப்டன் மந்தீப் சிங்கின் மகளான குர்மேகர் கவுர், தனக்கு விடுக்கப் பட்ட மிரட்டல்கள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்படி டெல்லி பொருளாதார விவகார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து இணை ஆணையர் தீபேந்திர பதக் கூறியபோது, மாணவிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர் பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆன்லைனில் மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT