கேரளாவின் அட்டப்பாடி மாவட்டத்தைச் சேர்ந்த அனீஷ் (22). காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி தனது பெண் தோழியுடன் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆழிக்கல் கடற் கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவர் மீதும் தாக்குதல் நடத்தி கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் இந்த முழு சம்பவத் தையும் படம்படித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அனீஷ், நேற்று முன்தினம் மாலை அட்டப்பாடியில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது மரணத்துக்கு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட இருவர் தான் காரணம் என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அனீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது கடிதத்தை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் அனீஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், இதுவரை 3 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். அதே சமயம் மாநில மனித உரிமை ஆணைய மும் தானே முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது.