விஷம் கலந்த தேநீர் விற்பனை யாளரான மோடி இந்தியாவின் பிரதமராகக் கூடாது என ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “காங்கிரஸுக்கு தோல்வி நிச்சயம் என்று தெரிந்த தால் சோனியா தன் மகன் ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பலிகொடுக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார். மேலும், தேநீர் வியாபாரியால் தோற்கடிக்கப் படுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மோடியின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பதிலடி கொடுத் துள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி இது தொடர்பாகக் கூறுகையில், “தேநீர் விற்கும் ஒருவர் நாட்டின் பிரதமராக வரலாம். ஆனால், விஷத் தேநீர் விற்பவர் பிரதமராகக் கூடாது. நரேந்திர மோடி குஜராத் முழுவதும் விஷத்தேநீரை விற்பனை செய் துள்ளார்” என்றார் அவர்.
மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி லூதியானாவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பாஜக வால் பிரதமர் வேட்பாளரைத்தான் தர முடியும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வலிமையான பிரதமரைத் தர முடியும். கடந்த இரு தேர்தல்களிலும் பாஜக பிரதமர் வேட்பாளர்களை மட்டும்தான் முன்னிறுத்தியது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்துதான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். வரும் தேர்தலில் மக்களின் நல்லாசியுடன் நாட்டின் வலிமையான பிரதமரை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசத்துக்கு அளிக்கும், என்றார்.