தெற்கு திபெத் என்று சீனாவினால் அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களின் பெயர்களை சீன எழுத்தில் பொறிக்கப்பட்டது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறும்போது, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவே மறுபெயரிடுதல் அல்லது புதிய பெயர்களைக் கண்டுபிடித்து இடுவது ஆகியவற்றால் சட்டவிரோத ஆக்ரமிப்பு சட்டபூர்வமாகி விடாது, என்று தெரிவித்தார்.
தலாய் லாமாவுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதை எதிர்த்து வந்த சீனா தலாய் லாமா அருணாச்சலத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு வருகை தந்ததையடுத்து சீனா-இந்திய உறவுகளில் லேசான விரிசல் ஏற்பட்டு வருகிறது.
தலாய் லாமாவுக்கான இந்திய ஆதரவை எதிர்க்கும் விதமாக அருணாச்சலப்பிரதேசத்தின் 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியது, இதற்குத்தான் இப்போது இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.