இந்தியா

காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் மிரட்டலையும் மீறி ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

செய்திப்பிரிவு

காஷ்மீர் இளைஞர்கள் அண்மைகாலமாக போலீஸ், ராணுவத்தில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த உமர் பயஸ் என்ற இளம் ராணுவ அதிகாரியை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர். ராணுவத்தில் சேரக்கூடாது என்று பிரிவினைவாதிகளும் மிரட்டல் விடுத்தனர். எனினும் அண்மையில் நடந்த போலீஸ் ஆட்தேர்வு முகாமில் நூற்றுக் கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் பங்கேற்றனர்.

காஷ்மீரின் டிரால், ராம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் சப்சார் அகமது பட் உட்பட 8 தீவிரவாதி கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து காஷ்மீர் பள்ளத் தாக்கில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நகர், பதான் பகுதிகளில் நேற்று ராணுவ இளநிலை அதிகாரிகளுக்கான ஆட்தேர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 1,300 இளைஞர்கள் பங்கேற்றனர்.

ஆளுநர் ஆட்சி

ஜம்மு காஷ்மீரில் உடனடியாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அம்மாநில முன் னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரில் ஊரடங்கு

ஹிஸ்புல் தளபதி சப்சார் பட் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வன்முறை பரவுவதை தடுக்கும் வகையில் புல்வாமா, அனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங் களில் நேற்று ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதேபோல் கன்யார், நவ்ஹாட்டா, உள்பட நகரின் 7 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட பகுதி களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT