இந்தியா

பாஜகவை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது: கேஜ்ரிவால்

செய்திப்பிரிவு

டெல்லியில் பாஜகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார், ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளரைச் சந்தித்த அவர், "எங்களின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் அதிகாரப்பகிர்வு என்பது, மற்ற கட்சிகளிடம் இருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டும். நாங்கள் டெல்லியில் வெற்றி பெற்ற பிறகு, சுயாராஜ்ய சட்டத்தை அமல்படுத்தி இதை உறுதிப்படுத்துவோம்.

ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், ஆம் ஆத்மி எந்தக் கட்சியிடமும் ஆதரவைக் கோராது. யாருக்கும் ஆதரவு கொடுக்காது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் பல காலியாக இருந்தது, மக்கள் காங்கிரஸ் நம்பிக்கை இழந்து விட்டதைக் காட்டுகிறது.

டெல்லியில் பாஜகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்கிறபோது, நரேந்திர மோடியால் என்ன செய்ய முடியும்?

அண்ணா ஹசாரே என்னுடன் இருந்திருந்தால், தற்போதை நிலையை விட ஆயிரம் மடங்கு பலமுள்ளவர்களாக இருந்திருப்போம்" என்றார் அரவிந்த் கேஜரிவால்.

SCROLL FOR NEXT