டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் உமர் காலித் பங்கேற்ற கருந்தரங்க நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) மாணவ் அமைப்பினர் நடத்திய போரட்டத்தில் வன்முறை வெடித்தது.
டெல்லியிலுள்ள வோர்ட்கார்ஃப்ட் பதிப்பகம் 'போரட்டத்தின் கலச்சாரங்கள்' என்ற தலைப்பில் கருந்தரங்க தொடரை இரண்டு நாள் டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
ராம்ஜாஸ் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கருந்தரங்க நிகழ்வில், கடந்த ஆண்டு தேச விரோத குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆய்வு மாணவரும், மாணவ செயற்பாட்டாளருமான உமர் காலித் பேச்சாளராக கலந்துக் கொண்டார்.
ஆனால் உமர் காலித் கலந்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ) மாணவ அமைப்பினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போரட்டம் குறித்து ராம்ஜாஸ் கல்லுரி மாணவர் ஒருவர் கூறும்போது, "வலது சாரி மாணவர்களின் இந்தப் போரட்டம் வன்முறையாக மாறியது. மாணவர்களின் போரட்டக்காரணமாக மூடப்பட்ட அறையில் உமர் காலித் பங்கேற்ற கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்தரங்கம் நடைபெற்ற அறைகளின் ஜன்னல்களை கற்களைக் கொண்டு எறிந்தனர்" என்று கூறினார்.
இது குறித்து உமர் காலித் கூறும்போது, " ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) மாணவ அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி கருந்தரங்கம் நடைபெறாத வண்ணம் தொந்தரவு செய்தனர். ஏபிவிபி எதை கண்டு பயப்படுகிறது? இந்த கருந்தரங்க உரையாடல் ஆதிவாசிகளுக்கு எதிரான போரை பற்றியது" என்று கூறினார்.
ஏபிவிபி அமைப்பினரின் போராட்டம் காரணமாக கருத்தரங்க நிகழ்வில் உமர் காலித் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது.