இந்தியா

ஆம் ஆத்மிக்கான ஆதரவு நிபந்தனையற்றது அல்ல: தீட்சித்

செய்திப்பிரிவு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்காக, காங்கிரஸ் அளிப்பது நிபந்தனையற்ற ஆதரவு அல்ல என்று ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முடிவை வரவேற்பதாக டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி முடிவை தாம் வரவேற்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை ஆம் ஆத்மி பூர்த்தி செய்யும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. இந்த ஆதரவு, நிபந்தனையற்றது கிடையாது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என் நல் வாழ்த்துகள். ஆம் ஆத்மி கட்சி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன் வைத்ததாலேயே அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம்.

எனினும், அக்கட்சி வைத்துள்ள சில வாக்குறுதிகள் நடைமுறைக்கு அப்பாற்பட்டவை. எனவே ஆம் ஆத்மி முன்வைத்துள்ள எல்லா வாக்குறுதிகளையும் அதனால் நிறைவேற்ற முடியாது" என்றார்.

SCROLL FOR NEXT