இந்தியா

இங்கிலாந்துக்கான தூதராக ரஞ்சன் மாத்தாய் நியமனம்

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக ரஞ்சன் மாத்தாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் வெளியுறவுச் செயலரான ரஞ்சன் மாத்தாய், விரைவில் தனது பணியை தொடங்குவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஞ்சன் மாத்தாய் தனது வெளியுறவுச் செயலர் பொறுப்பில் இருந்து கடந்த ஜூலை 31-ல் ஓய்வு பெற்றார். தற்போது இங்கிலாந்து தூதராக இருந்துவரும் ஜெய்மினி பகவதியின் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.

SCROLL FOR NEXT