பிஹாரின் கயா மாவட்டத்தில் நக்சல் தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கயா மாவட்டத்தின் பஸ்கத்வா கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், மாநில போலீஸாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினரை கண்டதும், நக்சல் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்நது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 நக்சல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வனப்பகுதியில் மேலும் சில நக்சல்கள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவ தால், கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.