இந்தியா

காஷ்மீரில் இந்திய-பாக். எல்லையில் 20மீ நீள சுரங்கப்பாதை: எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடிப்பு

பிடிஐ

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் 20 மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் சுரங்கப் பாதையையின் மூலம் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊருவியதாகவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது. 20 மீட்டர் தூரம் சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சுரங்கப் பாதையின் தொடக்கம் பாகிஸ்தானில் உள்ளது. இந்த சுரங்கப் பாதையை தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊருவ பயன்படுத்தியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பு படை வீர்ரால் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க பாதை குறித்து பாகிஸ்தான் படையினரிடம் தெரிவிக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சம்பா மாவட்டத்தில் இதே மாதிரியான சுரங்கபாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்க பாதை 75-80 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்தது. இந்த சுரங்க மையமும் பாகிஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. பாகிஸ்தான் எல்லை கிராமங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதற்கான உள்ளீடுகள் உள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT