இந்தியா

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை: சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் பேச்சு

செய்திப்பிரிவு

இந்தியாவில் பள்ளி இடைநிற்றல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என்று சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.

நிதி ஆயோக் சார்பில் டெல்லி யில் அண்மையில் நடந்த தொடர் சொற்பொழிவில் தர்மன் சண்முக ரத்தினம் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் பள்ளிகள் தற் போது மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளன. இப்பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. இதில் இந்தியா - கிழக்கு ஆசிய நாடுகள் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இப்பிரச்சினையை நியாயப்படுத்த முடியாது.

இந்தியாவில் பள்ளிக் கல்வியை முடிக்காமல் இடையில் நிற்கும் குழந்தைகளின் எண் ணிக்கை 43 சதவீதமாக உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 7 லட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதும், 53 சதவீத பள்ளிகளில் மட்டுமே சிறுமிகளுக்குத் தனி கழிப்பறை இருப்பதும், 74 சதவீத பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதி இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதேசமயம் மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் இந்தியாவில் உருவாகின்றனர். இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம்களில் படித்தவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் முக் கியப் பொறுப்புகளில் உள்ளனர். கல்வியில் இந்தியாவில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது. ஒருபுறம் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களை உலகுக்கு இந்தியா அளிக்கிறது. மறுபுறம் அடிமட்டத்தில் உள்ளவர்களின் ஆற்றலைப் பயன்படுத்தாமல் உள்ளது.

கல்விக்கு அதிகம் செல விடாததே இதற்கு காரணம் என்று கூறமுடியாது. நாம் எவ்வாறு ஆசிரியர்களைத் தேர்வு செய் கிறோம். அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கிறோம். ஆசிரியர் களை எவ்வாறு நாம் பொறுப் பேற்கச் செய்கிறோம். தரமான கல்விக்கு என்ன முயற்சி எடுக் கிறோம். ஒவ்வொரு பள்ளியும் சிறந்த பள்ளியாகத் திகழ்வதை நாம் எவ்வாறு உறுதி செய்கிறோம் என பல்வேறு நடவடிக்கையில் இதன் வெற்றி உள்ளது.

உயர் கல்வி அமைப்பிலும் மிகப்பெரிய சவாலை நான் கான் கிறேன். இது இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கொரியா மற்றும் ஐரோப்பிய நாடு களிலும் இப்பிரச்சினை உள்ளது. மாணவர்களுக்கு நடைமுறையில் தேவைப்படும் திறனை நாம் அளிக்கத் தவறுகிறோம்.

மனித வள மேம்பாடு என்பது 12 அல்லது 18 வயது வரை குழந்தைகளுக்கு என்ன அளிக் கிறோம் என்பது மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதும் கற்பதற்கு ஒருவருக்கு என்ன வாய்ப்புகள் அளிக்கிறோம் என்பதாகும். வாழ்க்கை முழவதும் கற்கலாம். நம்மை புதுப்பித்துக்கொள்ள இது அவசியம். இவ்வாறு சண்முகரத்தினம் பேசினார்.

SCROLL FOR NEXT