இந்தியா

வரி விலக்குக்கு தகுதியான படங்களுக்கு ‘க்யூ’ சான்றிதழ்: தேசிய திரைப்பட தணிக்கை வாரியம் யோசனை

செய்திப்பிரிவு

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் கதையம்சம் கொண்ட சிறந்த பாலிவுட் திரைப்படங்களுக்கு ‘க்யூ’ சான்றிதழ் அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான யோசனையை மத்திய அரசிடம் தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (சிபிஎப்சி) தலைவர் அளிக்க உள்ளார்.

தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் தயாராகும் புதிய திரைப்படங்கள் மத்திய அரசின் அமைப்பான சிபிஎப்சிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் தணிக்கை குழுவினரால் அத்திரைப்படம் பார்வையிடப்பட்டு அதற்கு ‘யு’ அல்லது ‘ஏ’ சான் றிதழ் அளிக்கப்படுகிறது. இந்த வகையில் புதிதாக இனி ‘க்யூ என்ற தரக் குறியீடு அளிக்க திட்ட மிடப்பட்டு வருகிறது. அத்திரைப் படம் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியானது என்பதே இதன் பொருளாகும்.

இந்தச் சான்றிதழின் அடிப்படை யில் அந்தந்த மாநில அரசுகள் வரிவிலக்கு குறித்த முடிவு எடுக் கலாம் என திட்டமிடப்படுகிறது. இந்த யோசனையை மத்திய அரசிடம் சிபிஎப்சியின் தலைவர் பஹலஜ் நிஹாலனி பரிந்துரைக்க உள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பஹலஜ் நிஹலானி கூறும்போது, “பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் மற்றும் அதிக செலவில் எடுக் கப்படும் படங்களே தயாரிப்பாளர் களுக்கு லாபம் தருகின்றன. மற்ற படங்களுக்கு கூட்டமே வருவ தில்லை. இதற்கு திரையரங்கு களின் கட்டணம் மிகவும் அதி கரித்து விட்டதே காரணம் ஆகும். ஆனால் ஆபாசக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு கூட்டம் கூடுவதால் அவற்றுக்கு லாபம் கிடைத்து விடுகிறது.

எனவே வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் அளித்தால் பிரபல நட்சத்திரங்களின் பங்கேற்பு இல்லாமலும் சிறந்த படங்கள் வர வாய்ப்புள்ளது. இது குறித்து ஷியாம் பெனகல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது” என்றார்.

நிஹலானி தனது புதிய யோசனைக்கு ஆதரவு திரட்டுவதற் காக விரைவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப் பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். நிஹலானியின் இந்த யோசனை குறிப்பாக பாலிவுட் படங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், “யு சான்றிதழ் அளித்தாலே தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்து விடுகின்றன. ஆனால் பாலிவுட் படங்களுக்கு அவ்வாறு அளிக்கப்படுவதில்லை” என்கிறார் நிஹலானி.

இது பற்றி சிபிஎப்சி உறுப்பினர் கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “வாரியத்தின் கூட்டத் தில் கலந்து பேசாமல் தன்னிச் சையாக இந்த முடிவை நிஹலானி எடுத்துள்ளார். வரிவிலக்கு என்பது அந்தந்த மாநிலத்தைப் பொறுத்தது என்பதால் அதில் மத்திய அரசு தலையிட முடியாது” என்றனர்.

SCROLL FOR NEXT