இந்தியா

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் பிரீடம் 251 ஸ்மார்ட்போன்: ஜூன் 28 முதல் விநியோகம்

செய்திப்பிரிவு

இம்மாதம் 28-ம் தேதி முதல் பிரீடம் 251 ஸ்மார்ட் போன் விநியோகம் செய்யப்படும் என்று நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூ. 250 விலையிலான இந்த ஸ்மார்ட்போன் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டவுடன் சந்தையில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. வரும் ஜூன் 28-ம் தேதி முதல் 30,000 நபர்களுக்கு இந்த போன் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.

முன்பதிவு செய்தவர்களுக்கு போன் கிடைத்த பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற அடிப்படையில் (சிஓடி) விநியோகிக்கப்பட உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா தெரிவித்தார். இதே முறையை வருங்காலத்திலும் பின்பற்ற நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரியில் பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க நாளிலேயே 7 கோடி பேர் இணையதளத்தில் முற்றுகையிட்டதால் நிறுவன இணையதளம் முடங்கியது.

SCROLL FOR NEXT