இந்தியா

துல்லிய பார்வையில்லாத பட்ஜெட்: ராகுல் விமர்சனம்

பிடிஐ

துல்லியமான பார்வையில்லாத பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, "துல்லிய பார்வையில்லாத பட்ஜெட் இது. விவசாயிகள், இளைஞர்கள், வேலை வாய்ப்புகள் குறித்தும் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா இன்று சந்திந்து வரும் முக்கியமான பிரச்சினை வேலையின்மை. நீங்கள் எப்படி இந்த பிரச்சினையை சரி செய்ய போகிறீர்கள்? நீங்கள் வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் எந்த துல்லிய பார்வையும் இல்லை. விவசாயிகள் நலன், இளைஞர்கள், வேலை வாய்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

கடந்த வருடம் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் வாக்களித்ததை நினைவுப்படுத்துகிறேன்.

விவசாயிகள் கடன் பிரச்சினையால் மிகுந்த துயரத்தில் உள்ளனர். ஆனால் அதுகுறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை

ரயில்வே பட்ஜெட் குறித்து கூறும்போது, மோடி புல்லட் ரயில் குறித்து வாக்குறுதி அளித்திருந்தார். எங்கே புல்லட் ரயில்?" என்று அடுக்கடுக்காக விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்தார்.

SCROLL FOR NEXT