இந்தியா

திருப்பதியில் நாடாளுமன்ற குழுஆய்வு

செய்திப்பிரிவு

திருப்பதியில் சுற்றுச்சூழல் சிறப்பாக பராமரிக்கப்படுவதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை கமிட்டி தலைவர் டி. சுப்புராமி ரெட்டி தலைமையில் 12 பேர் கொண்ட உறுப்பினர்கள் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தனர்.

இவர்களை தேவஸ்தான செயல் நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் இக்குழுவினர் திருமலையில் உள்ள வெங்கமாம்பாள் அன்னதான சத்திரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குழுவின் தலைவர் சுப்புராமி ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருமலையில் சுற்றுச்சூழல் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படும் இடம் தரமானதாக உள்ளது. திருமலையில் பக்தர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளன என்றார்.

பின்னர் இக்குழு உறுப்பினர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். இவர் களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக் கப்பட்டது.

SCROLL FOR NEXT