இந்தியா

இன்று சர்வதேச யோகா தினம் - 150 வெளிநாடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்: லக்னோவில் பிரதமர் மோடி உட்பட 55,000 பேர் பங்கேற்பு

பிடிஐ

நாடு முழுவதும் 5,000 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் விழாவில் 55,000 பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல்முறையாக சர்வதேச யோகா தினம் புதுடெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

அதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு ஆசனங்களைச் செய்து விழாவைச் சிறப்பித்தார். இதில் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த 35,985 பேர் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இதேபோல் கடந்த ஆண்டு பிரதான யோகா நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.

இந்நிலையில், 3-வது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேச தலைநகர் லக்னோ வில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெறும் பிரதான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். காலை 6 மணிக்குத் தொடங்கும் விழாவில் 55,000 பேர் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களைச் செய்ய உள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் பார்வையிட்ட னர். பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் யோகா பயிற்சி மேற்கொள்கின்ற னர்.

முன்னதாக இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டனர்.

இன்று விழா நடைபெறு வதை அடுத்து, மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ அதிரடிப் படையினரும், துணை ராணுவப் படை வீரர்களும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர்.

புதுடெல்லியில் கனாட் பிளேஸ், லோதி கார்டன், நேரு பூங்கா, தால்கதோரா கார்டன், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட 7 இடங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் யோகா கலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்குவோருக்கு ‘பிரதமர் விருது’ வழங்கப்படுகிறது.

இந்தியா தவிர 150 நாடுகளிலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பூங்கா, பிரான்ஸில் பாரிசில் உள்ள ஈபிள் டவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிராபல்கர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் யோகா தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

யோகா தினத்தின் முன்னோட்ட மாக பூடான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற யோகா பயிற்சி படங்களை பிரதமர் மோடி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளி யிட்டார்.

இதற்கிடையே, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக லக்னோவில் 22 பேரைப் போலீஸார் கைது செய்துள் ளனர். பிரதமர் வருகையின்போது அவரது கான்வாயை மறித்து, கறுப்புக் கொடி காட்ட திட்ட மிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT