இந்தியா

தி இந்து நிருபருக்கு விருது

செய்திப்பிரிவு

'தி இந்து' நாளிதழ் நிருபர் அனுமேகா யாதவ் 'மனிதநேய செய்தி விருதினைப்' பெற்றுள்ளார்.

பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, செஞ்சிலுவை சங்க சர்வதேச கமிட்டி ஆகியவை இணைந்து பத்திரிகை நிருபர்களுக்கான சிறப்புப் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

மருத்துவச் சேவை அளிப்பவர்கள், அமைப்புகள், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த ஆண்டு சிறப்புப் போட்டி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 40-க்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் 'தி இந்து' நாளிதழ் நிருபர் அனுமேகா யாதவ் முதலிடம் பிடித்தார்.

'தி வீக்' பத்திரிகை நிருபர் அனு தாமஸ், 'கிரேட்டர் காஷ்மீர்' நாளிதழ் நிருபர் இம்ரான் முஷாபர் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். டெல்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு 'மனிதநேய செய்தி விருதுகள்'வழங்கப்பட்டன.

மனிதநேய செய்தி விருதுடன் (இடமிருந்து) கிரேட்டர் காஷ்மீர் நிருபர் இம்ரான் முஷாபர், 'தி இந்து' நாளிதழ் நிருபர் அனுமேகா யாதவ், தி வீக் நிருபர் மினி தாமஸ்.

SCROLL FOR NEXT