இந்தியா

முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு ரூ.6,000 நிதியுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் பயன்அடையும் வகையில் சிறப்பு மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒரு கர்ப்பிணிக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். அதில் ரூ.5 ஆயிரத்தை மத்திய மகளிர், குழந்தைகள் நலத் துறை அளிக்கும்.

இத்திட்டம் ஆதார் எண் அடிப்படையில் நேரடி மானியமாக அவரவர் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தப்படும். கர்ப்ப கால தொடக்கத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணிக்கு முதல்கட்டமாக ரூ.1,000 அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அடுத்து 6 மாத கர்ப்ப சோதனைக்குப் பிறகு ரூ.2,000-ம் பிரசவத்தின்போது ரூ.1,500-ம், குழந்தை பிறப்பு பதிவின்போது ரூ.1,500-ம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்'' என்றார்.

SCROLL FOR NEXT