இந்தியா

திருமலையில் இன்று ஸ்ரீராம நவமி

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ராம நவமி கொண்டாடப்படவுள்ளது.

ஸ்ரீராம நவமி விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண் டாடப்படவுள்ளது. இதையொட்டி அனைத்து வைணவத் தலங் களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்நிலை யில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமியின் ஹனுமந்த வாகன சேவை இன்று மாலை நடக்கிறது. பின்னர் கோயில் வளாகத்தில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் நடக்கிறது. நாளை ராம பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT